தென்னிந்திய திரைப்படக் என்று குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஆதி முருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் இதனையடுத்து நடிகர் ஆதி நடிப்பில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த ஈரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிக முக்கிய கதாபாத்திரங்களிலும் என பல பரிமாணங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த  திரைப்படம் க்ளாப். இசைஞானி இளையராஜா நடிப்பில் வெளிவந்த க்ளாப் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து முன்னணி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் போத்தினேனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள தி வாரியர் திரைப்படத்தில் நடிகர் ஆதி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். வருகிற ஜூலை 14ஆம் தேதி தி வாரியர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வைரலாகும் ஆதி-நிக்கி கல்ராணியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ…