3 முறை 3 பெண்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளி! 14 வருடங்களுக்கு பிறகு கைது..

3 முறை 3 பெண்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளி! 14 வருடங்களுக்கு பிறகு கைது.. - Daily news

தனது நண்பர்களுடன் சேர்ந்து 3 முறை, 3 பெண்களை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளியை, கிட்டதட்ட 14 வருடங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து உள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தான், இந்த கொடூரமான கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறிய நிலையில், அந்த மாநில போலீசார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

அதாவது, சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவ் சிராஜித் ராம் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில், முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார். 

இவர் மீது அந்த மாநில போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, போலீசாருக்கு பயந்து அந்த நபர் கடந்த 2008 ஆம் ஆண்டே தலைமறைவானார். இது குறித்து, தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் யார் கையிலும் சிக்காமல் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் தான், கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்குள்ள பூரண நகர் பகுதியில் கூரிய கத்தி மாதிரியான ஆயுதத்தை கொண்டு ஒருவர் பொது மக்கள் மத்தியில் இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் விரைந்துச் சென்றனர். 

அப்போது, அங்கு பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நபரை கோட்வாலி காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

இதனையடுத்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிய வந்தது.

அந்த வகையில், தற்போது “கைதான அந்த நபர், கடந்த 2008 ஆம் ஆண்டு 3 கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஷிவ் சிராஜித் ராம் என்பது” தெரிய வந்தது.

இதனையடுத்து, பாலியல் குற்றவாளியான ஷிவ் சிராஜித் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்தோடு சேர்த்து, ஆயுத தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கையும் போலீசார் தற்போது பதிவு செய்து உள்ளனர். 

மேலும், கடந்த 2008 ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர், இந்த 14 ஆண்டுகள் எங்கு இருந்தார்? அதே மாவட்டத்தில் தான் அவர் இருந்தார் என்றால், அவரை ஏன் போலீசார் கைது செய்யாமல் விட்டனர்? என்று, பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்து உள்ளன. இந்த விசயம், அம்மாநில போலீசாருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment