தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் ஹீரோவாக நடித்து கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி திரையரங்குங்களில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் டான்.கல்லூரி மாணவன் தன் கனவை நோக்கி எடுத்து வைக்கும் படிகள் குறித்து ஜாலியாகவும் எமோஷனல் ஆகவும் தெரிவித்துள்ளது இந்த படம்.

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளை அள்ளி வருகிறது இந்த படம்.லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

பலரது பாராட்டுகளை அள்ளி வரும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் 100 கோடிகளை கடந்து பெரிய சாதனை படைத்துள்ளது.இந்த படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி செம ஹிட் அடித்த பிரைவேட் பார்ட்டி பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.