“எனக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் சண்டை?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலக்ஷ்மி சரத்குமார் – சுவாரஸ்யமான வீடியோவுடன் விவரம் உள்ளே..

ஸ்ருதி ஹாசன் உடனான பிரச்சனை வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த வரலக்ஷ்மி சரத்குமார் - Varalakshmi Sarathkumar explains shruti haasan clash | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் அவர்களின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார் 'போடா போடி' படம் மூலம் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக மட்டுமல்லாமல் பல வித்யாசமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து கொடுத்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி தெலுங்கில் ‘வீர சிம்ஹா ரெட்டி, தமிழில் ‘கொன்றால் பாவம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அவர் தமிழில்  ‘பிறந்தாள் பராசக்தி’ , ‘பாம்பன் ஆகிய  படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நமது கலாட்டா ஏற்பாடு செய்திருந்த ரசிகர் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தனது ரசிகர்களை சந்தித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் வரலக்ஷ்மிக்கும் ரொம்ப நாளாகவே பிரச்சனை என்ற வதந்தி குறித்து கேட்கையில்,

"எனக்கும் ஷ்ருதிக்குமா? இதுப்பத்தி இப்போதான் நான் கேள்வி படுறேன்.. நாங்க இப்போதான் வீர சிம்ஹா ரெட்டி படத்துக்காக துருக்கிக்கு ஒண்ணா போய் நடிச்சுட்டு வந்தோம்.. தொடர்ந்து இரண்டு படம் நடிச்சிருக்கோம். நாங்க பள்ளியிலிருந்தே நெருக்கமானவர்கள். நாங்கள் ஒரே கூட்டம். ஒரே நேரத்தில் தான் ஒன்றாக சுத்துவோம். சென்னை வந்தா அவ கூட தான் வெளிய போறது எல்லாம். அவ மும்பை போனதும் கொஞ்சம் இடைவெளி வந்துடுச்சு.. நட்பு ரீதியாக இல்லாமல் அவருவருக்கு தனிப்பட்ட வேலை இருக்குல..  அதான்.. எங்க இரண்டு பேருக்குள்ள பிரச்சினையெல்லாம் இல்லை." என்றார். "நான் என்ன பற்றி வர புரளிகளை படிக்க மாட்டேன். என்னை பற்றியும் வராது. என்ன பற்றி மீம், ட்ரோல் பன்றவங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்..  காஞ்சனா, சண்டைக்கோழி படம் மீம் கூட நானும் ஷேர் செய்தேன்." என்றார்.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை வரலக்ஷ்மி சரத்குமார் பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ..

“நான் பயந்துட்டேன்னு சொல்லுவாங்க..” அரசியல் விமர்சனத்திற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த் – வைரலாகும் சுவாரஸ்யமான பேச்சு இதோ..
சினிமா

“நான் பயந்துட்டேன்னு சொல்லுவாங்க..” அரசியல் விமர்சனத்திற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த் – வைரலாகும் சுவாரஸ்யமான பேச்சு இதோ..

சிவகார்த்திகேனின் ‘மாவீரன்’ படத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் .. - அட்டகாசமான வீடியோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விவரம் உள்ளே..
சினிமா

சிவகார்த்திகேனின் ‘மாவீரன்’ படத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் .. - அட்டகாசமான வீடியோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விவரம் உள்ளே..

நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டிரைலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - படக்குழு வெளியிட்ட வெறித்தனமான glimpse இதோ..
சினிமா

நானி நடிக்கும் ‘தசரா’ படத்தின் டிரைலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள் - படக்குழு வெளியிட்ட வெறித்தனமான glimpse இதோ..