100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய 55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை அனுமதிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


இதன்படி,  மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களை நூறுநாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களை, இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை  நூறுநாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பணிக்கு பயன்படுத்த கூடாது எனவும் பணியாளர்கள் அனைவரும் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வேலையாட்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பரிமாறக் கூடாது என கூறியுள்ள தமிழக அரசு 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.