தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கையும் மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த, மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.  


இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வரும் 26ம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கூடங்கள், கூட்ட அரங்குகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதியில்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் செயல் பட அனுமதியில்லை. அனைத்து வழிப்பாட்டு தளங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதியில்லை.


பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க அனுமதியில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 50% ஊழியர்களுடன் தான் இயங்க வேண்டும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.