நெல்லையில் வளர்ப்புத் தந்தையே 14 வயது சிறுமியை மிரட்டித் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால், சிறுமி 6 மாதம் கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் உலகம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பேச்சியம்மாள், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து. பேச்சியம்மாளின் கணவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, தன் பெண் குழந்தை உடன் பேச்சியம்மாள் தனியாக வசித்து வந்தார். தற்போது, பேச்சியம்மாளின் குழந்தைக்கு 14 வயது ஆகி வரும் நிலையில், அதே பகுதியில் பேச்சியம்மாள், துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  

இந்நிலையில், தன்னுடன் சக துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் தேவராஜ் என்பவரை, பேச்சியம்மாள் சமீபத்தில் 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு தேவராஜ் - பேச்சியம்மாள் இருவரும் ஒன்றாக வேலைக்குச் சென்று வந்த நிலையில், மாலையில் வீடு திரும்பும் போது மட்டும் கணவன் தேவராஜ் சீக்கிரமே வீட்டிற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அப்படி, வேலையை முடித்துக்கொண்டு மனைவி பேச்சியம்மாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வரும் தேவராஜ், வீட்டில் தனியாக இருக்கும் பேச்சியம்மாளின் 14 வயது மகளை மிரட்டியே, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு, தினமும் வேலையை முடித்துக்கொண்டு சீக்கிரம் வீடு திரும்பும்போதெல்லாம், அந்த சிறுமியைத் தொடர்ந்து மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இப்படியாக சுமார் 6 மாத காலம் இந்த பாலியல் பலாத்கார கொடுமை தொடர்ந்துகொண்டே இருந்துள்ளது. இதன் காரணமாக, அந்த சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதனைக் கவனித்த சிறுமியின் தாய் பேச்சியம்மாள், தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய மருத்துவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.

அதன்படி, மருத்துவர்களும் சிறுமியைப் பரிசோதித்துப் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அங்கேயே கதறி அழுகிறார். அதன் பிறகு, சிறுமியிடம் இது குறித்து விசாரித்து உள்ளார். அப்போது, “அப்பா தேவராஜ் தான் என்னைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும், சீக்கிரம் வேலையை விட்டு வீட்டிற்கு வரும் போதெல்லாம், இதைத் தான் அவர் செய்துகொண்டே இருந்தார்” என்றும், அழுதுகொண்டே கூறி உள்ளார். 

அத்துடன், “இது பற்றி உங்களிடம் சொன்னால், என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று அப்பா மிரட்டினார்” என்றும், அந்த சிறுமி அழுதுகொண்டே கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள், தன் கணவன் தேவராஜிடம் இது குறித்து கேட்டுள்ளார். அவரும், ஆமாம் என்று ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள், தேவராஜிடம் சண்டைபோட்டு உள்ளார்.

அப்போது, தேவராஜ் மனைவி பேச்சியம்மாளை கடுமையாக மிரட்டியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மகளை பாலியல் பலாத்காரம் செய்த கணவன் மீது அங்குள்ள மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேச்சியம்மாள் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வளர்ப்புத் தந்தை தேவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

இதனிடையே, வளர்ப்புத் தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.