சென்னையில் ஸ்கூட்டரில் தனியாக செல்லும் பெண்களின் ஆடைகளை இழுத்து கஞ்சா குடுக்கீஸ் இருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நெல்சன்மாணிக்கம் சாலையில் பட்டப்பகலில் இளம் பெண்ணான யோகா ஆசிரியை ஒருவர் தனது ஸ்கூட்டரில், அண்ணா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 புள்ளீங்கோஸ், அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து கடும் தொல்லை கொடுத்து உள்ளனர்.

ஆனால், அவர்களைப் பார்த்துப் பயந்த அந்த பெண், வண்டியை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார். ஆனால், அப்போதும் விடாத அந்த கஞ்சா பாய்ஸ், அந்த பெண் ரன்னிங்கில் இருக்கும் போதே, அந்த பெண்ணின் ஆடைகளை இழுத்தும், அந்த பெண்ணின் ஹேண்ட் பேக்கை இழுத்தும் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

இதனால், பயந்துபோன அந்த பெண், தனது வாகனத்தை அங்கேயே நிறுத்தி உள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் நடு ரோட்டிலேயே அவர்களது வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், பதறிப்போன அந்த இளம் பெண், அந்த பகுதியில் நடந்த பாஜக போராட்டத்திற்குப் பாதுகாப்பிற்கு வந்த போலீசாரை அணுகி புகார் கூறி உள்ளார்.அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். அப்போது, குறிப்பிட்ட யோக ஆசிரியை மட்டும் இல்லாமல், அந்த பகுதியில் தனியாகச் செல்லும் பல பெண்களிடமும் அவர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதில், யோகா ஆசிரியை சற்று தைரியமானவர் என்பதால், அவர் தைரியமாக வந்து புகார் அளித்துள்ளார் என்றும், மற்றவர்கள் “ஏன் பிரச்சனை என்று பயந்து” புகார் அளிக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், சென்னைக்கு கர்நாடகம் மற்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும், சென்னையில் அண்ணா நகர் அருகே உள்ள டிபி சத்திரம் பகுதியே நீண்ட காலமாக கஞ்சா விற்பனை செய்யப்படும் கோட்டையாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், சென்னையில் தீவுத்திடல் குடியிருப்பு, பொர் நினைவுச்சின்னம் குடியிருப்ப, வட சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கஞ்சா வியாபாரிகளின் சொர்க்க பூமியாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்திலும் இந்த கஞ்சா விற்பனையானது, எந்த தடங்கலும் இன்றி, முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, ஸ்கூட்டரில் தனியாக செல்லும் பெண்களின் ஆடைகளை இழுத்து கஞ்சா குடுக்கீஸ் இருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம், கடும் சென்னை மக்களை கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி உள்ளது.