மாஸ்டர் கடந்து வந்த பாதை!

 

கொரோனா, லாக்டவுன், IT ரெய்டு, திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கு தடை என்று பல்வேறு தடைகளுக்குப் பிறகு பொங்கலுக்கு வெற்றிகரமாக  ரிலீஸாக இருக்கும் மாஸ்டர் திரைப்படம் கடந்து வந்த பாதையை இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க!

 

பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜயோட அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. விஜய்-யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கு ஏ ஆர்முருகதாஸ், வெற்றிமாறன் என்று பல முக்கிய இயக்குநர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 

 

இந்த நிலைலயில்தான் 2019 ஆகஸ்ட் 24ஆம் தேதி #Vijay64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள் படக்குழு. விஜய்-யின் உறவினர் சேவியர் ப்ரிட்டோ அவர்களின் XB film creators நிறுவனத்தின் தயாரிப்பில் Vijay64 படத்தை லேகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று அறிவித்தார்கள்.

 

மாநகரம், கைதி என்று  தொடர் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ்தான் டைரக்டர் என்று சொன்னதும் எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமானது. படம் அறிவிப்பு வெளியானதுமே  ரசிகர்களுக்கு பயங்கர உற்சாகம். ஆனால் அத்துடன் நிற்காமல் படத்தின் அடுத்தடுத்த நடிகர்கள் பட்டியல் வெளியிட  ஆரம்பித்தபோது இது கண்டிப்பாக வேற லெவல் படமாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு தோன்றதுவங்கியது.

 

குறிப்பாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்தது எல்லாருக்குமே மிகப்பெரிய ஆச்சர்யம்தான். விஜய்-யும் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடிக்க போற செய்தி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கே இன்ப அதிர்ச்சி என்று தான்சொல்ல வேண்டும்.

 

அடுத்தடுத்து மாளவிகா மோகனன் சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆன்ட்ரியா மற்றும் பல துணை நடிகர்கள் பட்டிலை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார்கள் படக்குழு! படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருந்த போது ,  2019 வருசத்தோட கடைசி நாளில் (டிசம்பர் 31) படத்தின் டைட்டில் + first look வெளியிட்டார்கள் படக்குழு.  விஜய் தன்னுடைய ஒரு கையால் தலையை கோதிக்கொண்டே இன்னொரு கையால் காப்பை சுத்துகிற மாதிரியான first look. டைட்டில், மாஸ்டர். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அந்த மாஸான டைட்டில்தான் அந்த 2020 நியூயர் trending.

 

அடுத்ததாக ஜனவரி 15 பொங்கல் ஸ்பெசலாக வெளியான மாஸ்டர் 2nd லுக் மற்றும் ஜனவரி 26 வெளியான 3rd  லுக்  என்று அடுத்தடுத்த அப்டேட்டுகள்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோட படத்தின் மீதான எதிர்பார்பையும் பயங்கரமாக கூட்டியது. குறிப்பாக விஜய்-யும் விஜய் சேதுபதியும் சேர்ந்து இருந்த போஸ்டர் வேற லெவல்ல இருந்தது.

 

இந்த நிலையில்தான், பிப்ரவரி 7,8 நாட்களில் விஜய்-யின் பனையூர் வீட்டில் வருமான வரித்துறை நடத்தின ரெய்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல், நெய்வேலியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில இருந்த விஜய்-யையும் அவசர அவசரமாக சென்னைக்கு அழைத்து வந்து சோதனை செய்தார்கள். இச்சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. வருமானவரித்துறை சோதனைக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு  திரும்பிய விஜய்க்கு ரசிகர்களோட ஆரவாரமான எதிர்பார்ப்பு காத்திருந்தது. ரசிகர்களோட பேராதரவில் நெகிழ்ந்து போன விஜய், வேன் மேல ஏறி எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு, செல்ஃபி எடுத்துக்கொண்ட  வீடியோ சோசியல் மீடியா முழுக்க வைரல் ஆனது. அதுமட்டுமில்லாமல் அந்த செல்ஃபியை விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “thank you Neyveli” என்று ட்வீட் செய்திருந்தார். அந்த வருடத்தின் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்ட போட்டோவாக அந்த செல்ஃபி சாதனை படைத்தது.

 

பிறகு பிப்ரவரி 14,  காதலர் தின ஸ்பெஷலாக  ரிலீஸ் ஆனது குட்டி ஸ்டோரிபாடல்.  விஜய் வாய்ஸ்-இல் உருவான அந்த பாடல் ரசிகர்களுக்கு பாசிட்டிங் எனர்ஜி கொடுத்தது. அதிரிபுதிரி ஹிட் அடிச்சதோட, ஒரேநாள்ல 9 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்தது. அந்த பாடலோட  வீடியோவில் வந்த விஜய் போட்டோஸ் எல்லாமே அருமையாவும் அட்டகாசமாவும் இருந்தது. அதை தொடர்து மார்ச் 10 வெளியான வாத்தி கம்மிங்துள்ளலான இசையால கவர்த்திழுத்தது. விஜய் ரசிகர்களின் புது ரிங்டோனாகவும் மாறியது.

 

பிறகு பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவில், மார்ச் 14ஆம் தேதி, இசை வெளியீட்டு விழாவை நடத்தினார்கள் படக்குழு.  விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “தளபதிய யாரும் இப்டி பாத்திருக்க மாட்டோம்; this will be a unusual Vijay film” என்று கூறி அனைவரயும் ஆச்சர்யப்படுத்தினார். அடுத்தடுத்து பேசிய பிரபலங்களும் இந்த படத்தில் எவ்வளவு புதுமையான விஜயை பார்க்க போகிறோம்னு கூறிஆவலை தூண்டினார்கள். கடைசியாக பேச வந்த விஜய், வாத்தி கம்மிங் பாடலுக்கு மேடையிலேயே ஆட்டம் போட்டு அனைவரையும் சந்தோசப்படுதினார். பேசும்போது நண்பர் அஜித் மாதிரி கோட் போடலமேனுகூறி அசத்தினார். இறுதியாக, Kill them with your success, Bury them with your smile! என்று கூறி தன்னுடை பேச்சை முடித்தார்.

 

அதன்பிறகு படத்தின் வெளியீட்டுக்காக எல்லோரும் ஆர்வமாக காத்திருந்தபோது யாருமே எதிர்பாராதவிதமா வந்தது கொரோனா.  2020-ல் எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்திய கொரோனா மாஸ்டரையும் விடவில்லை. ரிலீஸ் தேதி அறிவிக்கிற நிலையில் இருந்த படத்தை, கிட்டத்தட்ட 9 மாதங்கள் கிடப்பில போட்டுவிட்டது.

 

அதன்பிறகு 8 மாதங்கள் கழித்து நவம்பர் 14 மாஸ்டர் படத்தின்  டீசர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஒரே நாளில் 20 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டதுடன், இந்தியாவில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட வீடியோவாக ஆனது மாஸ்டர் டீசர்.

 

இதற்கிடையில, சூர்யாவின் சூரரைப் போற்றுபடம் கொரோனா சூழலை கருத்தில்கொண்டு அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல மாஸ்டர் படமும் OTT-யில் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்க துவங்கின. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நவம்பர் 28ஆம் தேதி மாஸ்டர் படக்குழு ஒரு அறிக்கை வெளியிய்ட்டார்கள். அதில், படத்தை OTT-ல் வெளியிடும் எண்ணம் இல்லை என்றும், தியேட்டர் வெளியீடு மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுருந்தார்கள். விஜய் ரசிகர்களும் அதயே எதிர்பார்த்திருந்ததால் அந்த அறிவிப்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது!

 

டிசம்பர் 24ஆம் தேதி தணிக்கைக்குழு மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் வாங்கினார்கள். பிறகு டிசம்பர் 29ஆம் தேதி, மாஸ்டர் படம் ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் ஸ்பெசலாக ரிலீஸ் என்று அதிரடியான அறிவிப்பு வெளியானது. 2021 புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் emoji வெளியிட்டது ட்விட்டர். இது ட்விட்டரில் அதிவேகமாக ட்ரெண்ட் ஆனது.

 

இதற்கிடையில்தான் டிசம்பர் 27ஆம் தேதி விஜய் முதல்வர் பழனிசாமியை சந்தித்த சம்பவம்  சினிமா, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவரை 50% இருக்கைகளுடன் இயங்கிக்கொண்டு இருந்த தியேட்டர்களுக்கு மாஸ்டர் படத்துக்காக 100 % அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தார் விஜய். விஜய் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஐனவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்ளுக்கு அதீத உற்சாகத்தை கொடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு  தியேட்டரில் விசில், ஆட்டம் பாட்டம் என்று முதல் நாள் முதல் காட்சிக்கு தயாரானார்கள். அதேநேரம் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த நிலையில் இந்த 100% அனுமதி ஆபத்தானது என்று பல தரப்புகளில் இருந்து விமர்சனங்களும் வந்தது.

அந்த அறிவிப்பு வந்த அடுத்தடுத்த நாட்களிலயே, மத்திய அரசு தடை, உயர்நீதி மன்றத்தின்  அழுத்தம் என்று 100% அனுமதி அறிவிப்பை வாபஸ் வாங்குவதாக தமிழக அரசு ஜனவரி 8ஆம் தேதி அறிவித்தது.

இப்படியான பிரச்சனைகளுக்கு நடுவில், நேற்று மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையானது! இதையொட்டி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு அந்த காட்சிகளை பகிர வேண்டாம் என்று டுவிட்டரில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்கள். இந்தநிலையில் சம்மந்தப்பட்ட நபர் பிடிபட்டதாகவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

இப்படி பல்வேறு சிக்கல்களையும் தடைகளையும் மீறி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வரும் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய Galatta சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!