"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" எனும் பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 29ஆம் தேதி காலை திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ள நிலையில் தனது தேர்தல் பிரசார பயணத் திட்டம் தொடர்பாக கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்ததார்.

அப்போது அவர் கூறியதாவது: வருகிற 29ம் தேதி புதிய பிரச்சாரத்தை  துவங்க இருக்கிறேன்.  கடந்த 10 ஆண்டு கால  அதிமுக ஆட்சியில் தமிழகம் அதள பாதாளத்திற்குள் சென்று விட்டது. விசம்போல் விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு,சமூக நீதி உருக்குலைப்பு என இப்படி நம்பி வாக்களித்த  மக்களுக்கு துரோகம் செய்வது தான் பழனிச்சாமி ஆட்சி என குற்றம் சாட்டிய அவர், 
எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் கிடையாது. மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து தர முடியாத நிலையில் தான் இந்த அதிமுக அரசு உள்ளது என்று கூறினார்.

கொரோனா காலத்தில் தமிழக மக்களை அதிமுக கைவிட்டு விட்டது. ஆனால்  திமுக மக்களை  கை விடவில்லை என்றும் அதற்கு எடுத்துக்காட்டு தான்..ஒன்றிணைவோம் வா திட்டம், விடியலைநோக்கி ஸ்டாலினின் குரல், மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் போன்றன நடைபெற்றதாக கூறினார்.மேலும் 10600 கிராம சபைக் கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டு 21000 கிராம சபைக் கூட்டங்களை நடத்தி உள்ளதாக தெரிவித்தார்.

அதனை திடர்ந்து  மு. க ஸ்டாலின் மக்களுக்காக  உறுதி மொழி ஏற்றார், அப்போது அவர் கூறியதாவது,

மு.க.ஸ்டாலின் ஆகிய நான் உறுதியேற்கிறேன்.மக்கள்  பிரச்சனையை தீர்ப்பது தான் எங்கள் முதல் பணி.
எனது முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில்  உங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்படும்.இதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன்.

தொடர்ந்து பேசிய அவர்  வருகிற 29ஆம் தேதியிலிருந்து ” உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக தெரிவித்தார்.அதன்படி முதலாவதாஃப திருவண்ணாமலையில் இருந்து பிரச்சாரக் கூட்டம் துவங்கும் எனத் தெரிவித்தார். மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுவோம் என்றும், 
நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து அதற்கு சீல் வைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் தங்கள் குறைகளை கூறுவதற்காக புதிய படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.குறைகளை எழுத்து வடிவில் தெரிவிப்பதற்காக மக்களிடம் படிவம் விநியோகிக்கப்படும் எனவும் , அதற்கான ஒப்புதல் சீட்டும் அந்த படிவத்திலேயே இருப்பதாகவும்  கூறினார்.மேலும் நேரடியாக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாத மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை www.stalinani.com என்ற இணையதளம் அல்லது    9179091790   என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள்.   தி.மு.க ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாட்கள் போர்கால அடிப்படையில் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

 

திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் அனைத்து மனுக்களை பரிசீலிக்கபபடும்.  தமிழகம் முழுவதும் வாங்கும் மக்களின் மனுவை விசாரிக்க ஒரு தனி துறை உருவாக்கப்படும்.
அந்த துறை மாவட்ட ரீதியாக இந்த மனுக்களை பிரித்து விசாரிக்க  நான் வாக்குறுதி தருகிறேன். 10 ஆண்டுகளாக அதிமுக செய்ய தவரியவற்றை திமுக செய்யும். 1 கோடி குடும்பத்தின் குறைகளை நிச்சயம் இதன்மூலம் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தேர்தல் அறிக்கை வேறு. இது வேறு.தேர்தல் அறிக்கை டி ஆர். பாலு தலைமையில் நடைபெறும் என்றும், கூட்டணி பேச்சு தொடர்ந்து நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.