ஓடும் ரயிலில் சபலப்பட்டதால், பெண்ணிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்த வியாபாரியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று, நேற்று முன் தினம் இரவு வந்துகொண்டு இருந்தது.

அந்த ரயலில் சென்னையைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக பணியாற்றும் நபர் ஒருவர், தன்னுடைய 40 வயது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்து உள்ளார். 

அப்போது, அந்த ரயில் கோவை ரயில் நிலையம் வந்த போது, அந்த ரயிலில் 4 பேர் ஏறி உள்ளனர். அவர்கள் 4 பேரும் அப்போது, நல்ல மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த ரயில், அங்கிருந்து கிளம்பி ஈரோட்டைக் கடந்த போது, நல்ல இரவுமாகிப் போனது. அப்போது, அந்த ரயலில் காண்ட்ராக்டராக பணியாற்றும் நபர் மற்றும் அவருடைய 40 வயது மனைவி உள்ளிட்ட அந்த ரயலில் பயணம் செய்த பெரும்பாலானவர்கள் அனைவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

அந்த நேரம் பார்த்து, மது போதையில் இருந்த அந்த 4 பேரில் ஒருவர் மட்டும், பக்கத்தில் உள்ள இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டரின் மனைவியிடம் திடீரென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். 

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அந்த பெண், தனது உடலில் ஏதோ செயல்பாடு ஒன்று நடப்பதைப் பார்த்து, திடுக்கிட்டு உள்ளார். உடனே கண் விழித்த அந்த பெண், கண் விழித்துப் பார்த்த போது, அந்த மது போதை ஆசாமி, தன்னை பாலியல்  சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கூச்சலிட்டு அந்த நபரை திட்டி உள்ளார். அந்த பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த மற்ற பயணிகள் அந்த நபரை பிடித்து வைத்துக்கொண்டனர்.  

அத்துடன், அந்த ரயில், காட்பாடி ரயில் நிலையம் வந்த போது, பிடித்து வைத்திருந்த அந்த நபரை, காட்பாடி ரயில்வே போலீசாரிடம் சக பயணிகள் ஒப்படைத்தனர். 

அப்போது பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்கிருந்த ரயில்வே நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் சம்மந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கோவையை சேர்ந்த இரும்பு வியாபாரி 57 வயதான பால சுந்தரம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், திண்டுக்கல்லில் மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த நபர் மீது போக்சோ ச‌ட்ட‌ம் பாய்ந்து உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த சாக்கு வியாபாரியான 38 வயதயான ஜெயச்சந்திரன், அதே பகுதியில் வசித்து வரும்
பள்ளி மாணவி ஒருவர், தனது வீட்டில் குளிப்பதைத் தனது செல்போனில் திருட்டு தனமாக வீடியோ எடுத்து உள்ளார்.

அப்போது, இதனை மாணவியின் பெற்றோர் தற்செயலாகப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து. திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக அவர்கள் புகார் அளித்தன‌ர். 

இந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர், ஜெயச்சந்திரனின் செல்போனை ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ஜெயச்சந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.