சபலப்பட்ட பள்ளி ஆசிரியர் ஒருவர், கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தான், இப்படி ஒரு சபல சம்பவம் அரங்கேறி உள்ளது.

சங்கரன்கோவில் அடுத்து உள்ள அழகுநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான மன்மதராஜ் என்பவர், அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ஆசிரியர் மன்மதராஜ் பணியாற்றும் அதே பள்ளியில் படித்த 19 வயது முன்னாள் மாணவி ஒருவர், தற்போது அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

முக்கியமாக, இந்தப் பள்ளியில் படிக்கும் போது, ஆசிரியர் மன்மதராஜிடம், அந்த மாணவி பாடத்தில் இருக்கும் பல்வேறு சந்தேகங்கள் கேட்பதும், அதற்கு அந்த ஆசிரியர் விளக்கமும் அளித்து வந்துள்ளார்.

இதனால், அந்த மாணவிக்கு ஆசிரியர் மீது மிகுந்த மரியாதை இருந்துள்ளது. அதன் காரணமாக, அந்த மாணவி, கல்லூரிக்குச் சென்ற பிறகும் அந்த ஆசிரியருடன் அந்த மாணவி தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஆசிரியர் மன்மதராஜை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட அந்த மாணவி, தனக்கு கல்லூரி பாடத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். 

அப்போது, எதிர்முனையில் பேசிய ஆசிரியர், “நான் குற்றாலம் பூங்காவில் இருப்பதாகவும், அங்கு நீ வாமா” என்றும். மாணவியை அழைத்து உள்ளார். 

அதன் படியே, ஆசிரியர் தெரிவித்த குற்றாலம் பூங்காவுக்கு அந்த மாணவி சென்றுள்ளார். அப்போது, பாடத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக மாணவியும், ஆசிரியரும் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென்று அந்த 19 வயது மாணவி மீது சபலப்பட்ட ஆசிரியர் மன்மதராஜ், திடீரென மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்து மீறலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, திடீரென்று சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். இதனால், அங்கிருந்த பொது மக்கள் ஓடிவந்து ஆசிரியரைக் 
கடுமையாகத் தாக்கி உள்ளனர். அத்துடன், அந்த ஆசிரியரை பிடித்து வைத்துக்கொண்டு இது தொடர்பாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து வந்த குற்றாலம் காவல் துறையினர், ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆசிரியர் ஒப்புக்கொண்டார். அதன்படி, காவல் துறையினர் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு 
செய்து, அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.