13 வயது சிறுமி உடன் இன்ஸ்டாகிராமில் பழகிய நபர், ஆபாசப் படத்தை அனுப்பச் சொல்லி மிரட்டிய நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. 

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருந்தார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

தற்போது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருவதால், அந்த சிறுமிக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கித் தந்து உள்ளனர். ஆனால், அந்த சிறுமி ஆன்லைன் வகுப்பு போக மீது உள்ள நேரங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மூழ்கிக் கிடந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அந்த 13 வயது சிறமி, இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் தொடங்கியதும், இளைஞர் ஒருவர் சிறுமிக்கு நண்பராக இருக்க அழைப்பு விடுத்து இருந்தார். அதனைச் சிறுமியும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், 2 பேரும் இன்ஸ்டாகிராமில் தினமும் மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களது சாட்டிங் ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் சென்று உள்ளது. அதாவது, ஒரு கட்டத்தில் அந்த சிறுமியும், அந்த இளைஞரும் ஆபாசமாகப் பேசிக்கொண்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர், சிறுமியிடம் அந்த இளைஞர் தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் அந்த சிறுமிக்கு அனுப்பி வைத்து உள்ளார். 

அது போல், “நீயும் உனது ஆபாசப் படத்தை எனக்கு அனுப்பி வை” என்று, சிறுமியும் அந்த நபர் கேட்டுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியும், தனது ஆபாசப் படத்தை அந்த இளைஞருக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த இளைஞர் சிறுமியிடம் தொடர்ச்சியாகப் பலவிதமான ஆபாசப் படத்தை எடுத்து அனுப்பி வைக்கும்படி தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், ஒரு கட்டத்தில் பயந்து போன அந்த சிறுமி, அந்த இளைஞருடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். 

அத்துடன், அந்த இளைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் அந்த சிறுமி பிளாக் செய்து உள்ளார். இதனால், அந்த இளைஞனால், அந்த சிறுமியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், வேறு ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அந்த சிறுமிக்கு சாட்டிங் செய்து தகவல் அனுப்பிய உள்ளார். அதில், “உனது ஆபாசப் படத்தை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால், நீ ஏற்கனவே எனக்கு அனுப்பிய ஆபாசப் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என்றும், அந்த நபர் பகிரங்கமாக மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், இன்னும் பயந்துபோன அந்த சிறுமி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர், இன்ஸ்டாகிராமில் பழகிய நபர் மீது பெங்களூரு தெற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, 13 வயது சிறுமி உடன் இன்ஸ்டாகிராமில் பழகிய நபர், ஆபாசப் படத்தை அனுப்பச் சொல்லி மிரட்டிய சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.