டேட்டிங் ஆப்பில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் இளம் பெண்கள் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார்கள்” என்று கூறி, இரு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணிடமிருந்து 16 லட்சம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.டி. நகரமாகத் திகழும் பெங்களூருவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர், அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த இளைஞர், பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் பொழுதைப் போக்கி வந்தார். அப்போது, டேட்டிங் செயலியில் அந்த இளைஞர் மூழ்கிப்போனதாகத் தெரிகிறது. அப்போது, அந்த டேட்டிங் ஆப் மூலமாக ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது, எதிர் முனையில் இருந்த இளம் பெண் ஒருவர், “என் பெயர் சுவேதா” என்று, அந்த அறிமுகம் ஆகி உள்ளார். அதன் பிறகு,  அந்த இளம் பெண்ணும், அந்த ஐ.டி. ஊழியருமாகச் சேர்ந்து செல்போனில் பல மணி நேரம் பல நாட்கள் பேசி பழகி வந்தனர்.

இப்படியான இந்த பழக்கத்தில் ஒருநாள், அந்த இளம் சுவேதா, ஐ.டி ஊழியரிடத்தில் “2 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தினால், இளம் பெண்கள் நிர்வாணமாக வீடியோ காலில் உங்களுடன் பேசுவார்கள்” என்று கூறி, ஆசையைக் காட்டி உள்ளார்.

இதில், அந்த ஐ.டி. ஊழியர் சற்று சபலப்பட்டு அது தொடர்பாக சுவேதாவிடம் விசாரித்து உள்ளார்.

அப்போது, “எனது தோழி நிகிதா கூட, இந்த மாதிரி பேசுவார்” என்றும், சுவேதா மேலும் ஆசையை ஆசையாகப் பேசி அந்த ஐ.டி. ஊழியரை மேலும் சபலப்பட வைத்துள்ளார். இதனால், அந்த ஐ.டி. ஊழியர் முற்றிலும் சபலமடைந்து காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, “உனது தோழி நிகிதாவை என்னிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேச வையுங்கள் நான் பணம் தருகிறேன்” என்று, அந்த ஐ.டி. ஊழியர் சொல்லியிருக்கிறார். அதன் படியே, நிகிதாவின் போன் பே நம்பரை கொடுத்த சுவேதா, இந்த நம்பருக்கு 2 ஆயிரம் அனுப்ப சொல்லியிருக்கிறார். அதன்படியே, போன் பே மூலம் அந்த இளைஞர் 2 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். 

அதன்படியே, சற்று நேரத்தில் அந்த இளைஞரின் செல்போன் எண்ணுக்கு அழைத்த இளம் பெண் ஒருவர், “நான் நிகிதா” என்று, தன்னை அறிமுகம் செய்துகொண்டு உள்ளார். அதன் பின்னர், வாட்ஸ்ஆப் வீடியோ கால் செய்யும்படி அந்த நபரிடம் நிகிதா கூறியுள்ளார்.

இதனால், அந்த ஐ.டி. ஊழியரும் வாட்ஸ்ஆப்பில் வீடியோ கால் செய்து, அந்த இளம் பெண்ணுடன் பேசி உள்ளார். அப்போது, வீடியோ காலில் பேசிய அந்த இளம் பெண் கேட்டுக்கொண்ட படியால், அந்த ஐ.டி. ஊழியர் தனது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக நின்றதாகத் தெரிகிறது. இதனை, வாட்ஸ்ஆப்பில் பேசிய இளம் பெண் ஸ்கீரின் சாட் எடுத்து வைத்து கொண்டார். அதன் பின்னர், அந்த இளைஞரை தொடர்பு கொண்டு பேசிய நிகிதாவும், சுவேதாவும், “உனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க, எங்களுக்கு நீ பணம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம்” என்று, பகிரங்கமாகவே மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த இளைஞர், பல கட்ட தவணைகளாக 16 லட்ச ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். ஆனாலும், அந்த இரு பெண்களும் தொடர்ந்து அந்த ஐ.டி. ஊழியரை மீண்டும் மீண்டும் மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் கடும் கோபம் அடைந்த அந்த நபர், தன்னை மிரட்டி வந்த நிகிதாவும், சுவேதாவையும் அங்குள்ள ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில், புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இளைஞரிடத்தில் பணம் பறித்த இளம் பெண்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.