உக்ரைன் மீது ரஷியா குண்டு வீச்சு தாக்குதல்! போர் தொடங்கியதா? இல்லையா?

உக்ரைன் மீது ரஷியா குண்டு வீச்சு தாக்குதல்! போர் தொடங்கியதா? இல்லையா? - Daily news

“உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை தொடர்ந்து குவித்து உள்ளதால் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், உக்ரைனில் ஒரு பகுதியில் திடீர் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றிருப்பது போர் தொடங்கிவிட்டதா?” என்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா எந்நேரமும் போர் தொடுக்கலாம் என்கிற அபாயகரமான சூழல் தற்போது நிலவி வருவதாக, அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதனால், “ரஷ்யா போர் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது” என்று, அமெரிக்கா தொடர்ந்து அறிவித்து வந்த நிலையில், ரஷ்யாவை வெளிப்படையாகவே அமெரிக்கா தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால், ரஷ்யாவை அமெரிக்கா வெளிப்படையாகவே பகைத்துக்கொண்டது.

ஆனாலும், இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ரஷ்யா,  உக்ரைன் நாட்டின் மீது போர் தொடக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் தான், உக்ரைன் மீது இன்று குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.

அதுவும், டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், இன்று திடீரென குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று உள்ளது. 

அந்த கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி மீது இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

“அந்த மழலையர் பள்ளியின் மீது அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த  தாக்குதலில் மழலையர் பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியர்கள் படு காயமடைந்ததாகவும்” அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன், இந்த தாக்குதல் காரணமாக, அந்த கிராமம் முழுவதும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், இந்த தாக்குதலை யார் நடத்தியது என்கிற முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ரஷியாவே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. 

அதே நேரத்தில், “ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினார்களா? அல்லது உண்மையிலேயே ரஷியா தான் இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியதா? அல்லது வேறு யாரேனும் இந்த தாக்குதலை இந்த குண்டு வீச்சு தாக்குதலை நடத்தினார்களா?” என்று, பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளுக்கு எழுந்துள்ள நிலையில், இன்னும் உறுதியான தகவல்கள் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment