12 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பல முறை பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாணவி தன் வீட்டில் இருந்து வந்து உள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான மதன் என்ற இளைஞர், அந்த 17 வயதான பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை தன் வசப்படுத்தி உள்ளார்.

இதனையடுத்து, அந்த மாணவியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று, அந்த மாணவியை அவன் மிரட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை அந்த மாணவி யாரிடமும் வெளியில் சொல்லாமல் இருந்து வந்து உள்ளார்.

மாணவி இது குறித்து வெளியே கூறாமல் இருப்பதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மதன், அடிக்கடி அந்த மாணவியைத் தொந்தரவு செய்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால், அந்த மாணவி ரொம்பவும் பயந்துபோய் காணப்பட்டு உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமாகி உள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் அந்த மாணவி கிடைக்காத நிலையில், பயந்துபோன மாணவியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாயமான அந்த 17 வயது பள்ளி மாணவியை மதன் என்ற  இளைஞர் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

மேலும், அந்த மாணவியைத் தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்து, மதன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது. அதனையடுத்து, போலீசார் அதிரடியாக அங்கு விரைந்து சென்று, அந்த மாணவியை மீட்ட நிலையில், மாணவியை கடத்திய மதனை என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அத்துடன், மதனிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற பிறகு, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, அந்த மாணவியை போலீசார் அந்த மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.