இந்திய சினிமாவையே பெருமைப்படுத்தும் விதமாக தனது நடிப்பின் மூலம்  ரசிகர்களை வியக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பில் பட்டையை கிளப்பி விடுவார் விக்ரம்.கடந்த வருடம் வெளியான கடாரம் கொண்டான் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து கோப்ரா,பொன்னியின் செல்வன்,மஹாவீர் கர்ணா,துருவ நட்சத்திரம்,சீயான் 60 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் சியான் விக்ரம்.

கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.லாக்டவுன் நேரத்தில் இந்த படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

கோப்ரா,மஹாவீர் கர்ணா,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கை கொரோனா பாதிப்பு குறைந்த பின் சியான் விக்ரம் தொடங்குவார் என்று தெரிகிறது.இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து விக்ரம் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் லாக்டவுன் முடிந்ததும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வந்த துருவ நட்சத்திரம் படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.இன்னும் கடைசிகட்ட ஷூட்டிங் மீதமுள்ளது,விரைவில் இந்த ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிவித்திருந்தனர்.ஐஸ்வர்யா ராஜேஷ்,ரித்து வர்மா,பார்த்திபன்,சிம்ரன்,திவ்யதர்ஷினி,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Ondraga என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாடலான ஒரு மனம் பாடல் சமீபத்தில் வெளியானது.ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடல் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.