கோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்று ஐபிஎல் தொடர்.தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,இந்த தொடர் நடக்குமா இல்லையா என்ற பல போராட்டங்கள் வந்து சென்றன.முக்கிய ஸ்பான்சர்களில் மாற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை இந்த வருட ஐபிஎல் தொடர் சந்தித்துள்ளது.ஒருவழியாக இந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.

12 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 13ஆவது சீசன் இன்று UAE-யில் தொடங்குகிறது.முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.இருபெரும் அணிகள் மோதும் இந்த போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் ஆஸ்தான அணியான சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏராளமான ஆதரவு உள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.கடந்த உலகக்கோப்பை 2019 அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு , தற்போது தான் தோனி களத்தில் இறங்கப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இந்த முறை சென்னை அணியின் முதல் பாதி சரியாக அமையவில்லை என்றாலும்,அடுத்த பாதியில் ஆட்டத்தை மாற்றி வெற்றி பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் உள்ளனர்.

இந்த ஐபிஎல் தொடரில் தமிழக வீரர்கள் சிலர் ஜொலித்து வருகின்றனர்,அதில் ஒருவர் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி.கொல்கத்தா அணி தங்கள் பயிற்சி புகைப்படங்கள் சிலவற்றை ட்விட்டரில் பதிவிட்டனர்.இதில் வருண் கையில் தளபதி விஜயின் படத்தை பச்சை குத்தி உள்ளார்,இதனை கவனித்த தளபதி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.