தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடப் போகும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகமே, 2021 சட்டப்பேரவை தேர்தலை மிகவும் ஆவேலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தின் முக்கிய கட்சிகளான 
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதும், தொகுதி பங்கீடு குறித்தும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தங்களது கட்சி உறுப்பினர்கள் யார் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறார்கள் என்கிற உத்தேச பட்டியல் தற்போது வெளியிட்டு வருகின்றன.

அதன் படி, அதிமுக முதல் கட்சியாக தங்களது முதல் உத்தேச பட்டியலை வெளியிட்டு இருந்தது.

இப்படியான சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 சட்டப் பேரவைத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.

இப்படியான நிலையில் தான், பாஜக வின் உத்தேச பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், பாஜக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் பெயர் விபரங்கள் மற்றும் அவர்கள் போட்டியிடப் போகும் தொகுதிகளின் விபரங்கள் அடங்கிய உத்தேச பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன் படி,

- பாஜக தமிழ் மாநிலத் தலைவர் எல். முருகன், ராசிபுரம் தொகுதியில் போட்டியிருக்கிறார்.
- பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், மூத்த தலைவருமான ஹெச்.ராஜா, காரைக்குடி தொகுதியில் போட்டியிருக்கிறார்.
- பாஜக தேர்தல் பொறுப்பாளர் நடிகை குஷ்பு, சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிருக்கிறார்.
- மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிருக்கிறார்.
- பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டிப்போடுகிறார்.

- பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, கிணத்துக்கடவு தொகுதியிலும்,
- மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன், சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும்,
- மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியிலும்,
- மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, திருத்தணி தொகுதியிலும்,
- மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதர், சென்னை வேளச்சேரி தொகுதியிலும் களம் இறங்குகிறார்கள்.

- மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி. செல்வம், சென்னை துறைமுகத்தில் களம் இறங்ககிறார்.
- மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் திருவாரூர் தொகுதியிலும்,
- வி.பி. துரைசாமி மகன் டாக்டர் பிரேம், ஆத்தூர் தொகுதியிலும், 
- தணிகைவேல், திருவண்ணாமலையிலும்,
- மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, வேலுர் தொகுதியிலும் போட்டிப்போடுகிறார்கள்.

அதே போல்,

- மாநில துணைத் தலைவர் நரேந்திரன், ஒசூரில் தொகுதியில் களம் காண்கிறார்.
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவ முருக ஆதித்தன், தூத்துக்குடியிலும்,
- கார்வேந்தன், பழனியிலும்,
- ஏழுமலை, சிதம்பரத்திலும்,
- கேசவன், காஞ்சிபுரம் தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டிப்போடுவதாக, பாஜக தலைமை உத்தேச பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.