ஆபாச ஜோடி ஒன்று, இளைஞர்களை சபலப்பட வைத்து டேட்டிங் ஆப் மூலம் கிட்டத்தட்ட 16.5 லட்சம் ரூபாய் சுருட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அண்ணாநகரில் தான் இப்படி ஒரு சபலமான மோசடி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மனிஷ் குப்தா என்ற நபர், அங்குள்ள காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், “நான் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக 16,50,000 ஆயிரம் ரூபாய் இழந்ததாகவும், என்னை மோசடி செய்து என்னிடம் இருந்து இந்த பணத்தைப் பறித்துக்கொண்டதாகவும் புகார்” அளித்தார். 
 
இந்த புகார் தொடர்பாக, மத்திய குற்றப் பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரரைணயில், “சென்னையைச் சேர்ந்த திபான்க்ர் காஸ்னிவாஸ், யாசிம் கான் ரசூல் பெக் ஆகிய இருவரும், ஆண்களைக் குறிவைத்து டேட்டிங் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையின் போது, “மும்பைச் சேர்ந்த தனிப்படை போலீசார் டேட்டிங் மோசடிக் கும்பலை மற்றொரு வழக்கில் கைது செய்திருப்பதும்” சென்னை போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும், இவர்கள் ஏற்கெனவே சட்ட விரோதமாக ஆபாசப் படங்களைத் தயாரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக மும்பை போலீசார், சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இதனையடுத்து, சென்னை போலீசார் மும்பைக்கு சென்று சம்பந்தப்பட்ட கணவன் - மனைவி இருவரையும் கைது செய்து, சென்னை அழைத்து வந்துனர்.

கைது செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் பிறகு, அவர்களைச் சிறையில் அடைத்தனர். 

குறிப்பாக, இந்த மோசடிக் கும்பலின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப் பிரிவு போலீசார், தற்போது முடங்கி உள்ளனர். இந்த மோசடி கும்பலிடம் யார் யார் இதுவரை ஏமார்ந்து இருக்கிறார்கள் என்ற விபரங்களையும் போலீசார் சேகரிக்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.