கந்தசஷ்டி கவசம் பாடலை ஆபாசமாக சித்தரித்து பேசி வீடியோ வெளியிட்டதாக கூறப்பட்டு கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்திரம், குகன் ஆகியோரை போலீசார் கைது செய்து, மேலும் சுரேந்திரன், செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.


கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், அறியாமையை ஒழிக்கவுமே பதிவுகளை இட்டதாகவும் கறுப்பர் கூட்டம் பதிவில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கு விசாரணக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குண்டர் சட்டம் பிறப்பித்த உத்தரவில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு வழக்கிற்காக குண்டர் சட்டம் பதிவு செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் கொடுத்த மனு சரியாக பரிசீலிக்கப்படாமல் காலதாமதமாகியிருப்பதால் , இருவரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.