சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.

அஷீம்,ராதிகா ப்ரீத்தி,சாயாசிங் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் நடித்து வந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் மாற்றப்பட்டனர்.சில முக்கிய நடிகர்கள் விலகினாலும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரின் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்தவர் ராதிகா ப்ரீத்தி.பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

சில நாட்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகுவதாக இவர் அறிவித்தார்.தற்போது இவருக்கு பதிலாக புதிய ஹீரோயினாக அக்னி நட்சத்திரம் தொடரில் நடித்த வர்ஷினி நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.