பிக் பாஸ் புகழ் முகேன் ராவ் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கி உள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் வேலன் படத்தில் சூரி காமெடியனாக நடித்து வருகிறார். வேலன் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு முகேன் நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இதற்கு முன் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த ஆரவ் உள்ளிட்ட நடிகர்கள் சினிமாவில் ஜெயிக்கமுடியாமல் திணறுகின்றனர். ஆனால் முகேனுக்கு இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்திருக்கிறது.

இந்நிலையில் வேலன் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில்,சூரி தன் முன் கேமரா வைத்து பாடுவது போல செய்கிறார். அவரது குரலா இது எனநாம் அனைவரும் யோசித்து கொண்டிருக்கும் போதே சூரி செய்த கோல்மால் தெரியவந்துவிடுகிறது. முகேன் தான் பாடிக்கொண்டிருக்கிறார். சூரி அதற்கு வாய் மட்டும் அசைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

முகேன் தண்ணீர் குடித்தது தெரியாமல் அவர் பாடுவது போல தொடர்ந்து நடித்ததால் சிக்கிக்கொண்டார். இது காமெடிக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. என்ன சூரி அண்ணே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மக்கள் விரும்பும் நகைச்சுவை கலைஞனாக திகழ்பவர் சூரி. பல படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்த இவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சூரியின் எதார்த்தமான காமெடி பல ரசிகர்களை இவருக்கு பெற்றுத்தந்தது. விஜய், அஜித், விஜய்சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 

தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சூரி. இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறதாம். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்திலும் உள்ளார் சூரி. இதன் ரிலீஸ் தேதி சமீபத்தில் வெளியானது. சிவா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொரோனா காரணமாக நின்றது. தற்போது மீண்டும் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.