மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 27வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளதால் விவசயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்தாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடர்வது என விவசாயிகள் தொடர்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து ஆதரவு கிடைத்துக்கொண்டு இருக்கிறது. 


இந்நிலையில், ‘’ பயிர்களுக்கு மட்டும்தான் ஒப்பந்தமே தவிர, நிலத்துக்கு அல்ல. வேற எந்த ஒப்பந்தமும் நிலத்தின் மீது கிடையாது. விவசாயிகளின் நிலம் முழு பாதுகாப்புடன் இருக்கும். 
விளைபொருளுக்கான கொள்முதல் விலை, வேளாண்மை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏ.பி.எம்.சி மண்டிகள் தொடர்ந்து செயல்படும். ஏ.பி.எம்.சி மண்டிகள் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை.  


” புதிய சீர்திருத்தங்களின் இருக்கும் குழப்பங்களை நீக்க வேண்டியது, நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சரின் கடமை , இந்தச் சட்டங்கள் குறித்து சில விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் தவறான மாயையை உருவாக்கியுள்ளன. 


இந்த புதிய சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைகளின் அடிப்படையில் அரசு செய்திருக்கும் கொள்முதல்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை அளவாக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதில் அரசு புதிய சாதனை படைத்திருக்கும் சமயத்தில், கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை(எம்.எஸ்.பி) நடைமுறை கைவிடப்படும் என்று விவசாயிகளிடம் சிலர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உற்பத்திச் செலவைக் காட்டிலும் 1.5 மடங்கு அளவுக்கு எம்.எஸ்.பி விலையை அரசு உயர்த்தியுள்ளது. 


பயிர்களுக்கு மட்டும்தான் ஒப்பந்தமே தவிர, நிலத்துக்கு அல்ல. வேற எந்த ஒப்பந்தமும் நிலத்தின் மீது கிடையாது. விவசாயிகளின் நிலம் முழு பாதுகாப்புடன் இருக்கும்.
விளைபொருளுக்கான கொள்முதல் விலை, வேளாண்மை ஒப்பந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏ.பி.எம்.சி மண்டிகள் தொடர்ந்து செயல்படும். ஏ.பி.எம்.சி மண்டிகள் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வரவில்லை. 


யாரும் சட்டவிரோதமாக நிலத்தைக் கையகப்படுத்த முடியாது. ஏனெனில், விவசாய நிலப் பயன்பாட்டு உரிமையில் மாற்றம், விற்பனை, குத்தகைகள் மற்றும் அடமானம் வைக்கும் எந்த அம்சமும் இந்தச் சட்டத்தில் இல்லை.” என்று மத்திய அரசு தரப்பில் கூறி வந்தாலும் மண்டி முறையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. புதிய சட்டங்கள் மூலம் கார்பரேட் நிறுவனங்களும்தான் பயன்பெறுவர் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரதமர் மோடிக்கு இரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளனர். நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று சொல்லப்பட்டு வரும் போது ஒரு விவசாயி தன் இரத்ததில் எழுதி இருக்கும் கடிதம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.