பெற்ற மகளிடம் சபலப்பட்ட தந்தை, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தை அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான சங்கர் என்பவருக்கு, மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 

சங்கரின் மகளுக்கு தற்போது 9 வயது ஆகும் நிலையில், அவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

அதே நேரத்தில், இந்த கொரோனா காலத்தில் சரிவர வேலை கிடைக்காமலும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த தந்தை சங்கர், தான் பெற்ற மகளிடமே சபலப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் படி, சங்கரின் மனைவி கடைக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், அந்த 9 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இது தான் தக்க சமயம் என்று பார்த்த தந்தை சங்கர், தான் பெற்ற மகள் என்று கூட பார்க்காமல், சபலத்தில் தனது ஒன்பது வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாலியல் தொல்லை கொடுப்பது தந்தை என்பதால், அதை வெளியேவும் சொல்ல முடியாமல், சத்தம் போட்டு கூச்சலும் போட முடியாமல், சத்தமே இல்லாமல் தனது தந்தையுடன் அந்த சிறுமி போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, கடைக்குச் சென்றிருந்த சிறுமியின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் உள்ளே நுழைந்த போது, தன் மகளிடம் கணவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப்  பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், பதறிப்போன அந்த தயார், தனது கணவரிடம் சண்டைபோட்டு, தனது பெண் குழந்தையை மீட்டுள்ளார்.

இதனையடுத்து, கணவன் - மனைவிக்கு இடையே சண்டை நடந்துள்ளது. இதில், சங்கர் தன் மனைவியையும், மகளையும் திட்டியதாகத் தெரிகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அங்குள்ள சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் தன் கணவன் மீதே புகார் அளித்தார்.

சிட்லபாக்கம் காவல் துறையினர் இந்தப் புகாரை, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் படி, வழக்குப் பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுமியிடம் சேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்ற தந்தையே, தன் மகளுக்கு அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை சங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு, நீதிமன்றம் உத்தரவுப்படி, சங்கரை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.