மயிலாடுதுறை அருகே அக்காள் கணவரின் காம வெறியாட்டத்தால் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த சிறுமி வீட்டில் இருந்து வந்தார்.

ஆனால், சிறுமி கடந்த ஆண்டு பள்ளிக் கூடம் சென்ற போதே, வைதீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ்க்கு சிறுமியின் மீது காம பார்வை விழுந்துள்ளது. இந்த காம வசியத்தால், அவர் சிறுமிக்குப் பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கித் தந்து சிறுமியிடம் நெருக்கமாக முயன்றுள்ளார்.

அத்துடன், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு, சிறுமியின் அக்காவை எதாவது செய்து விடுவேன் என்று, சிறுமியிடம் பயமுறுத்தி வந்த தினேஷ், சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

மேலும், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் சிறுமியைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.  

சிறுமியின் அக்கா கணவர், சிறுமியை திருமணம் செய்துகொள்ளத் திட்டம் போட்டு, அவர் சிறுமியை தன் வீட்டிலேயே தங்க வைத்து தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார்.

ஒரு கட்டத்தில் சிறுமி கருவுற்றார். ஆனால், சிறுமி கருவுற்று சில மாதங்கள் கடந்த பிறகு தான், அது சிறுமிக்கே தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த விசயம் சிறுமியின் தாயாருக்கும் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, அக்காவின் கணவர் தினேஷ் தான் காரணம் என்பது தெரிய வந்தது.

அவரிடம் சென்று சிறுமியின் தயார் நியாயம் கேட்டபோது, அதற்கு “ அவளை நானே கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்” என்று தினேஷ் கூறி உள்ளார். இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் சிறுமியை அவரது தாயாரே தினேஷ்க்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, கருவுற்ற அந்த 14 வயது சிறுமி நேற்று முன் தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி நிறைமாத கர்ப்பமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மயிலாடுதுறை மருத்துவமனை நிர்வாகத்தினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ், மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தார். இதனை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மற்றும் பலர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அத்துடன், இதற்கு உடந்தையாக இருந்த சிறுமிக்கு கல்யாணம் பண்ணி வைத்த சிறுமியின் தாயார் மாரியம்மாள் மீதும், சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வேறு சில நபர்கள் மீதும், போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.