பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூா்வ குடியுரிமைக்கான முதல் மட்டும் முக்கிய சான்றிதழ்.  பிறப்புச் சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, வயது குறித்து ஆதாரம், ஓட்டுநா் உரிமம் பெற, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் பெற அவசியமான ஒன்று. முன்பு வரை பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969ன் படி குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். 


 மேலும் ஒரு குழந்தையின் பிறப்பை பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியைச் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்விதக் கட்டணமுமின்றி பெயா் பதிவு செய்திடலாம்.


தற்போது தமிழகத்தில் புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்ய 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெயரைப் பதிவு செய்த பின் அதை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது. இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.