கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்தில் பக்கத்து கடையில் உள்ள கியாஸ் சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் செல்வகணபதி என்பவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது மளிகை கடையுடன் சேர்த்து பட்டாசுகளையும் வைத்து விற்பனை செய்து வந்தார். 

அத்துடன், அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள அறையை தனது கடையின் குடோனாகவும் அவர் பயன்படுத்தி அங்கு பட்டாசுகளை சேர்த்து வைத்திருந்து வந்திருக்கிறார். 

இப்படியான சூழலில் தான், அந்த கடையில் நேற்று மாலை வழக்கம் போல் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத நிலையில், திடீரென்று அந்த பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கி உள்ளது. 

அப்போது, கண் இமைக்கும் நேரத்தில், அந்த கடையில் உள்ள பட்டாசுகள் யாவும் மிக பயங்கரமான சத்தத்துடன் நாலா புறமும் வெடித்து சிதறியது.

இந்த பட்டாசு விபத்தின் ஏற்பட்ட ஏற்பட்ட தீப்பிழம்பானது கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய நிலையில், அங்கு வானுயர அளவுக்கு அந்த தீ பிளம்பு வான் நோக்கி மேலே எழுந்தது. 

இந்த பயங்கரமான விபத்தைப் பார்த்த அங்குள்ள மும்முனை சந்திப்பில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க வந்திருந்த பொது மக்கள், யாவரும் அலறியடித்துக்கோண்டு அங்கு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பட்டாசு கடையில் கொழுந்து விட்டு எரிந்த தீயானது, அந்த பட்டாசு கடையை ஒட்டி இருந்த பேக்கரி கடைக்கும் பரவியதால், அந்த பேக்கரி கடையில் தீபாவளி பண்டிகைக்கான பலகாரம் செய்யும் வகையில், முன்னேற்பாடாக வாங்கி வைக்கப்பட்டு இருந்த கியாஸ் சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின. 

இதனால், அங்கு வெடிகுண்டு வெடித்தது போன்று பெரும் சத்தம் ஏற்பட்டு, அங்கிருந்த நிலைமை இன்னும் மோசமாகி தீ மேலும் பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது. இதனால், அங்கிருந்து நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல், நிலைமை கை மீறி எல்லை மீறி போனது.

இது குறித்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீப்பிழம் பட்டாசுகளும் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால், அவர்களால் தீயை அணைக்க அதன் அருகில் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இப்படியாக, கிட்டாட்ட 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, அதாவது இரவு 8 மணிக்கு தான் தீயணைப்பு வீரர்களால் விபத்து நடந்த கட்டிடத்துக்கு அருகே தீயணைப்பு வீரர்களால் செல்ல முடிந்தது. 

அப்போது பட்டாசு கடையின் உள்ளே 30 வயது பெண் ஒருவர், உடல் கருகிய நிலையில் அங்கு சடலாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அத்துடன், பட்டாசு கடையின் ஒரு பகுதி சுவர், அருகே இருந்த செல்போன் கடையின் மீது இடிந்து விழுந்து கிடந்தது. அந்த சமயத்தில் கடையின் முன்பு நின்றிருந்த சங்கராபுரத்தை சேர்ந்த ஷா ஆலம் காலித் ஆகியோர் படுகாயங்களுடன் அங்கு மீட்கப்பட்டனர்.

இப்படியாக, இந்த வித்தில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில், முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். ஆனால், தற்போது, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயிரிழந்து உள்ளது. தற்போது படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதி உதவி அறிவித்து உள்ளார்.

“விபத்து குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாக” தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று, அறிவித்து உள்ளார்.

அதே போல், விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.