தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் திகழ்கிறார்.

தமிழில் முன்னணி நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமான ஹே சினாமிகா, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 ஆகியப் படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி மற்றும் இயக்குனர் டிகே இயக்கத்தில் கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்திருக்கும் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்து வெளிவரும் பாலிவுட் திரைப்படம் உமா. AVMA மீடியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நீரஜ் கிரியேஷன்ஸ் வழங்கும் உமா திரைப்படத்தை இயக்குனர் தத்கட்டா சிங்கா இயக்கியுள்ளார்.

காஜல் அகர்வாலுடன் தின்னு ஆனந்த்,ஹர்ஷ்ச்சயா, மேக்னா மாலிக், கௌரவ் ஷர்மா, அயோஷி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று உமா படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.