தேர்ந்த நடிகராக மட்டுமல்லாமல் நல்ல தயாரிப்பாளராகவும் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் வாயிலாக சிறந்த திரைப்படங்களை தயாரித்து ரசிகர்களுக்காக வழங்கி வரும் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் த.சே.ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார்.

S.R.கதிர் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகர்கள் லிஜோமொள் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளிவந்த ஜெய் பீம் படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஜெய்பீம் படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது அதிரடியான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.