தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து தென்னிந்திய  திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். கடைசியாக தமிழில் அமலாபால் நடிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் வெளியானது.

தொடர்ந்து குட்டி ஸ்டோரி & பிட்ட கதலு ஆகிய ஆன்தாலஜி படங்களில் நடித்த அமலா பால் நடிப்பில், குடி யடமைத்தே எனும் தெலுங்கு க்ரைம் திரில்லர் வெப்சீரிஸ் சமீபத்தில் வெளிவந்தது. இதனையடுத்து மலையாளத்தில், ஆடு ஜீவிதம் மற்றும் தமிழில், அதோ அந்த பறவைபோல ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

அடுத்ததாக நடிகை அமலாபால் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் கடாவர். அமலா பால் தயாரிப்பில், அபிலாஷ் பிள்ளை கதை திரைக்கதையில், அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கியுள்ள கடாவர் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

முதல்முறையாக ஃபாரன்சிக்  அறுவை சிகிச்சை நிபுணர் கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ள கடாவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் அமலா பாலின் பிறந்த நாளான இன்று வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.