அஷ்வினின் ரொமான்டிக்கான என்ன சொல்ல போகிறாய் ஃபர்ஸ்ட்லுக் !
By Aravind Selvam | Galatta | October 27, 2021 07:14 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அஷ்வின் குமார்.இதற்கு முன் சீரியல்கள்,ஆல்பம் பாடல்கள்,படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அஷ்வின்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து இவர் நடித்த ஆல்பம் பாடல்கள் பெரிய வெற்றியை அடைந்தன.அடுத்ததாக Trident Arts நிறுவனம் தயாரிப்பில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் ஹீரோவாகும் வாய்ப்பை பெற்றார் அஷ்வின்.அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.
அவந்திகா மிஸ்ரா,தேஜு அஷ்வினி இருவரும் படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர்.குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரொமான்டிக் ஆன இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இந்த போஸ்டர்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
It IS a Good Morning 😊❤️
— Trident Arts (@tridentartsoffl) October 27, 2021
Here we GO, the First looks of #EnnaSollaPogirai 😍@i_amak @ImHharan #Ravindran @iamviveksiva @MervinJSolomon @Avantika_mish @TejuAshwini9 @VijaytvpugazhO @Richardmnathan @mathisachin @Gdurairaj10 @RubiniSakthi @DoneChannel1 @Muzik247in @gobeatroute pic.twitter.com/bfcseKprq8
RIP: Saturday Night Fever, The Sopranos actor Val Bisoglio passes away at 95
26/10/2021 07:21 PM
The Hangover actress Jamie Chung gives birth to twins - wishes pour in!
26/10/2021 06:35 PM
Watch the new powerful dialogue promo teaser of Suriya's Jai Bhim | Prime Video
26/10/2021 06:33 PM