லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதிராவ் ஹய்தாரி நாயகியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்குகிறார். இயக்குனரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

Vijay Sethupathis Tughlaq Darbar Shooting Update

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியது. 96 புகழ் பிரேம் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கியுள்ளது. 35 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், 40 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு மீதம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Vijay Sethupathis Tughlaq Darbar Shooting Update

விஜய் சேதுபதி கைவசம் லாபம், க.பெ. ரணசிங்கம், கடைசி விவசாயி போன்ற படங்கள் உள்ளது. அத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.