கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ். அதன் பின் பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், அபியும் நானும், ராவணன் போன்ற படங்களில் நடித்து அவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மலையாளத்தில் முன்னணி ஸ்டாராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியானது. 

Prithvirajs Daughter Shares An Emotional Video

ஆடு ஜீவிதம் படப்பிடிப்பிற்காக ஜார்டன் சென்றவர், கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக, படக்குழுவுடன் அங்கேயே சிக்கி கொண்டார். சுமார் 70 நாட்களுக்கு மேலாக ஜார்டனில் இருக்கும் பிரித்விராஜ் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

Prithvirajs Daughter Shares An Emotional Video

இதுகுறித்து அவரது மனைவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பிரித்விராஜின் மகள், My Father is Coming என எழுதும் வீடியோவை பதிவிட்டு, அவரது வருகை குறித்து தெரிவித்திருக்கிறார். இந்த பதிவுக்கு கமன்ட் செய்துள்ள ப்ரித்விராஜ், சீக்கிரமே திரும்பி வந்து, என் இளவரசியுடனும், என் ராணியுடனும் இருக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My father is coming! #Soon#DaadaComingHome#Thaadikaran😀🧿

A post shared by Supriya Menon Prithviraj (@supriyamenonprithviraj) on