சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores Chithu Vj Corona Soonapaana Post

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

Pandian Stores Chithu Vj Corona Soonapaana Post

கொரோனா காரணாமாக வீட்டிலேயே உள்ளதால் தங்கள் நேரத்தை பிரபலங்கள் பலவிதமாக செலவிட்டு வருகின்றனர்.தற்போது மாஸ்குடன் புகைப்படத்தை பகிர்ந்த சித்ரா கொரோனாவுக்காக எல்லாம் நம்ம மாஸ்க் போட வேண்டியதா இருக்கு என்று வடிவேலு ஸ்டைலில் நகைச்சுவையாக தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.