தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இதனை தொடர்ந்து இவர் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் நடித்த சில படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கும் Liger படத்தில் நடித்துவருகிறார்.

இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அனன்யா பாண்டே,ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் விஜய் தேவர்கொண்டா தற்போது இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விஜய் தேவர்கொண்டா.இந்த சந்தோசத்தை சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.