சீயான் 60 படத்தில் இணைந்த இளம் ஹீரோயின் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | March 13, 2021 11:12 AM IST
கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக கோப்ரா படத்தின் ரிலீஸ் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை அடுத்து சீயான் விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள சீயான் 60 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்த படம் பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வாணி போஜன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
.@vanibhojanoffl joins the gang #Chiyaan60 😊😊
Welcome Onboard!! #ChiyaanVikram #DhruvVikram
A @karthiksubbaraj Padam.. @Lalit_SevenScr @Music_Santhosh @proyuvraaj pic.twitter.com/U1cMjr2GDG— Seven Screen Studio (@7screenstudio) March 13, 2021