மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து  தனது அடுத்தடுத்த திரைப்படங்களை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுத்து மிக சிறப்பாக நடித்து வரும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் AGR எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்து வருகிறார். பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து 3-வது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தில் முக்கியமான சண்டை காட்சியில் இடம் பெற்ற போராட்டம் ராப் பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் நீரஜ் மாதவ் எழுதி பாடியுள்ள போராட்டம் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…