கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். சந்தானத்தின் 3 கதாபாத்திரம் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. 

இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரைலரில் டைம் ட்ராவல் செய்து தனது திருமணத்தை நிறுத்த போவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. இந்த ட்ரைலர் இணையவாசிகளை ஈர்த்தது. இந்த ட்ரைலரின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனது ரசிகர்களுக்கு நன்றியை கூறி பதிவு செய்துள்ளார் சந்தானம். மேலும் படத்தின் இசை அட்டகாசமாக வந்திருப்பதால், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தனது நன்றியை கூறி பதிவிட்டுள்ளார் சந்தானம். 

இந்த படம் தவிர்த்து பிஸ்கோத் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரும் வெளியானது. மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கிறார். இதில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.