கொரோனா தொற்று காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல பணிகள் ஸ்தம்பித்துள்ளன. அரசு கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் கரோனாவின் தாக்கம் தமிழகத்தில் குறையவில்லை. அரசுப் பணிகளில் 50 சதவீத பணியாளர்களைப் பயன்படுத்த கடந்த ஊரடங்கின்போது தளர்வு அறிவிக்கப்பட்டது.

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகம் உள்ளது. தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீத உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் கட்டாயம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. தற்போதுள்ள சட்டப்பேரவைக் கட்டிடம் பழமையான ஒன்று. உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர முடியாத வகையில் உள்ளது.

இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தை எங்கு நடத்துவது என சபாநாயகர் தனபால் ஆலோசித்து வருகிறார்.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில்  கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டத்தை நடத்துவது பற்றி தமிழக சட்டப்பேரவை சபாநாயர் தனபால் நேரில் ஆய்வு செய்தார். சபாநாயகருடன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துக்கொண்டனர். 

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அப்படியான சூழலில்தான், கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார் என கூறப்படுகிறது. சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தலால் இடநெருக்கடி காரணமாக மாற்று இடத்தில் சட்டசபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 24க்குள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என்பதால் சட்டசபையை கூட்ட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``சட்டப்பேரவை கூடுவதற்கு தகுந்த இடம் வேண்டுமென்று கலைவாணர் அரங்கத்தில் இந்த இடத்தைப் பார்த்துள்ளேன். முடிவு செய்து பின்னர் அறிவிப்போம். கலைவாணர் அரங்கில் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதுபற்றி பின்னர் அறிவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.