விஜய் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இதன் முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அன்ஷு ரெட்டி.

இந்த தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.இதனை தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவற்றை தவிர பல தெலுங்கு தொடர்களில் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் அன்ஷு ரெட்டி.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அன்ஷு ரெட்டி தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது இவருக்கும் சௌமித் ரெட்டி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 25ஆம் தேதி  நடந்து முடிந்துள்ளது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by priya (@sree_priya126)