ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | August 26, 2021 12:24 PM IST
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.
இவர் அடுத்ததாக பொல்லாதவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் ருத்ரன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார்,நாசர்,
இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ருத்ரன் திரைப்படம் திரையரங்குகளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி 2022-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
From the sets of #Rudhran #ருத்ரன் .
Will be out in theaters from 14th April 2022 🎥#RudhranfromApr14
DOP - @RDRajasekar
Editor - @editoranthony
Story - KP Thirumaaran
Art - Raju
Stunt - @silvastunt @offl_Lawrence @kathiresan_offl @gvprakash @priya_Bshankar @teamaimpr pic.twitter.com/7gHcs8jQv0— Five Star Creations LLP (@5starcreationss) August 26, 2021
Vijay Antony's directorial debut Pichaikkaran 2 begins with a pooja - Check out!
01/09/2021 08:05 PM