தமிழ் திரையுலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் சதீஷ். தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 2006-ம் ஆண்டு ஜெர்ரி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர், பல படங்களில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுதவிர்த்து சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ஜெயம் ரவியுடன் பூமி, ஆர்யா நடிக்கும் டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்களில் சதீஷும் ஒருவர். படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். இந்நிலையில் கொரில்லா படப்பிடிப்பு தளத்தில், ஸ்டண்ட் காட்சியின் போது டூப் ஆர்ட்டிஸ்ட் நடித்த காட்சியை வீடியோ பதிவு செய்து பகிர்ந்துள்ளார். 

அருகில் நடிகர் ஜீவா இருந்து கொண்டு, சதீஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று கூற... நான் தான் கஷ்டப்படுகிறேன்... ரசிகர்களுக்காக தான் எல்லாம் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

கடந்த ஆண்டு வெளியான கொரில்லா திரைப்படம் ரசிகர்கள் விரும்பும் படமாக அமைந்தது. ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்தர் இந்தப் படத்தைத் தயாரித்தார். ஜீவா ஹீரோவாக நடிக்க ஷாலினி பாண்டே, விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மதன் குமார், சுவாமிநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இவர்களுடன் காங் என்னும் சிம்பன்ஸி குரங்கும் நடித்திருக்கிறது. சாம் சி.எஸ் இசையமைத்த இந்த படத்தை டான் சாண்டி இயக்கியிருந்தார். 

இந்த லாக்டவுன் நடிகர் சதீஷுக்கு ஸ்பெஷல் என்றே கூறலாம். தினமும் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் பற்றியும், முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பேசியுள்ளார். வீணை வாசிப்பது, தந்தைக்கு ஷேவிங் செய்வது என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகள் துவங்கினால், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் சதீஷ்.