கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் காக்கா முட்டை. மணிகண்டன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், யோகிபாபு, விக்னேஷ் , ரமேஷ் ஆகியோரின் நடிப்பில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்ற இரு சிறுவர்களின் அட்டகாசமான நடிப்பால் இப்படம் தேசிய விருதினை பெற்றது. 

Kaaka Muttai Boys Transformation Photos Goes Viral

தற்போது இருவரும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்த இருவரும் ஆள் அடையாளம் தெரியாதபடி வளர்ந்துள்ளார். அழகாகவும் உடற்கட்டோடும் உள்ள இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் அளித்து வருகிறது. ஐந்து வருடத்தில் இப்படி ஒரு சேஞ்சா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

Kaaka Muttai Boys Transformation Photos Goes Viral

சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியாகிய அப்பா திரைப்படத்தில் நடித்தார் விக்னேஷ். நயன்தாரா நடித்த அறம் படத்திலும், பிழை என்ற படத்திலும் நடித்தார் ரமேஷ். விரைவில் இவர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக உயர கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.