தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் வெளியாகி அசத்தலான வரவேற்பு கிடைத்தது.

Harish Kalyan Started Early Morning Walking

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஊரடங்கால் படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருப்பதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக சமீபத்தில் தெரிவித்தார்.  

Harish Kalyan Started Early Morning Walking

இந்நிலையில் காலியான சாலைகளில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு நடந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹரிஷ். அதில் எப்படி இருந்ததோ அப்படியே தான் இருக்கிறது. அதனால் தான் அதை சந்திக்க தயாராகி விட்டேன் என்று பதிவு செய்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It is what it is. It is what it was. So I just decided to walk through it! P.C @aksheyabharadwaj

A post shared by Harish Kalyan (@harish_kalyan) on