தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர் சாந்தனு கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
 
அடுத்ததாக நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். நடிகர் சாந்தனுவின் தந்தையான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் தரண் இசையமைத்துள்ள  இத்திரைப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். 

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின்  டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து பாடகர்  சிட் ஸ்ரீராம் குரலில் வெளிவந்த ஏதோ சொல்ல பாடல் ரசிகர்களின் மனதில் தாளம் போட டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. இப்பாடலை சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலும் குக் வித் கோமாளி சிவாங்கி இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியான குத்து பாடலாக வெளிவந்த டாக்கு லெஸ்ஸு ஒர்க்கு மோரு பாடலில் ஒரே டேக்கில் சாந்தனு நடனமாடிய பாடல் காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ளார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.