ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பட்டாணி.தெலுங்கில் லோபர் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர்.இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார் திஷா.

இந்த படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்ற திஷா , இந்தியாவின் நேஷனல் க்ரஷ்ஷாக மாறினார்.இதனை தொடர்ந்து Kung Fu Yoga என்ற சீன படத்தில் நடித்தார் திஷா.இந்த படம் அதிகம் வசூல் செய்த சீன படங்களில் ஒன்றாக இன்றுவரை இருந்து வருகிறது.இதனை தொடர்ந்து பாகி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் திஷா.

இதனை தொடர்ந்து ஹிந்தி சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கானுடன் இணைந்து பாரத் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து மலாங் என்ற சரித்திர படத்தில் நடித்தார் திஷா.

இந்த படமும் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து மீண்டும் சல்மான் கானுடன் ஜோடிசேர்ந்து ராதே படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் திஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்து வருவார்.அப்படி தற்போது தனது பிகினி போட்டோக்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திஷா.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by disha patani (paatni) (@dishapatani)