கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தீபாவளிக்கு வெளியான கைதி படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தொடர்ந்து ஜோதிகாவுடன் இவர் இணைந்து நடித்த தம்பி படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இரண்டு படங்களில் ஷூட்டிங்குகளுமே கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.

சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ,ரூபன் படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.