நாடோடிகள் 2 படத்தை தொடர்ந்து சசிகுமார் எம்ஜிஆர் மகன்,ராஜவம்சம்,கொம்புவெச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தவிர நெல் ஜெயராமனின் வாழ்க்கை வலராற்று படம்,நாநா,2D தயாரிப்பில் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கும் படம் என்று பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இதில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது.கொரோனா பாதிப்பின் போது,மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தும் பலர் வெளியில் சுற்றி வருகின்றனர்.இதற்காக காவல்துறையுடன் சேர்ந்து சசிகுமார் மதுரையில் வாலன்டியராக ஒரு நாள் பணியாற்றினார் சசிகுமார்.

இவர் நடித்து வரும் MGR மகன் திரைப்படத்தை screen scene நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினிமுருகன் , சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.மிர்னாலினி ரவி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பிரபல பாடகர் அந்தோணி தாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழை பெற்றிருந்தது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செம ரகளையான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்