ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.கார்த்திக் வாசுதேவன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

மதன் பாண்டியன்,க்ரித்திகா லட்டு,மீனா குமாரி,உமா பத்மநாபன்,யுவராணி,தனலட்சுமி,ரவீனா,திவாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.இந்த தொடருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்த தொடரின் முன்னணி நட்சத்திரங்களுக்கென்று தனி தனியாக ஏராளாமான ரசிகர்கள் இருக்கின்றனர்.போட்டோக்கள்,வீடியோக்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலை கடைசியில் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் ஒரு பெரிய மாற்றத்தை ஜீ தமிழ் செய்துள்ளனர்.இதுவரை 6.30 முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இந்த சீரியல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.